×

ஒரே நாளில் 2 சிறுவர்கள் மாயம்

 

ஈரோடு,நவ.11: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள வெள்ளியம்பாளையம் புதூரைச் சேர்ந்த பழனிசாமி (50)மகன் ரூபன் குமார் (17). அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால்,மதியம் 1 மணி அளவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், பழனிசாமிக்கு போன் மூலமாக தொடர்பு கொண்டு, ரூபன் குமார் இன்று பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் தேடியும் ரூபன் குமார் கிடைக்கவில்லை.அதைத் தொடர்ந்து பழனிசாமி பவானிசாகர் போலீசில் நேற்று முன் தினம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ரூபன் குமாரை தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்துள்ள அம்மாபேட்டை, அலங்காரியூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (65).

இவரது மகன் ஹரிஹரேஸ்வரன் (14). சிங்கம்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் காலை வீட்டிலிருந்த ஹரிஹரேஸ்வரன் எங்கு சென்றார் என தெரியவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், தந்தை கணேசன், அம்மாபேட்டை போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான ஹரிஹரேஸ்வரனை தேடி வருகின்றனர்.

 

The post ஒரே நாளில் 2 சிறுவர்கள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Palaniswami ,Ruban Kumar ,Velliampalayam Pudur, Erode District ,Bhavanisagar ,mayam ,Dinakaran ,
× RELATED சொத்துவரி குறைவாக விதித்த...