×

சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம்

 

ஈரோடு, நவ. 13: உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு ஈரோடு இதயம் நற்பணி இயக்கம், மோனிகா டயபடிஸ் சென்டர், அர்த்தனாரி முதலியார் அற நிறுவனம், குகஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகள் சேவை மருத்துவமனை இணைந்து ஈரோடு கே.என்.கே சாலையில் சர்க்கரை நோய் கண்டறிதல் மருத்துவ முகாம் நடைபெற்றது. டாக்டர் தங்கவேலு முன்னிலையில் மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கேர்24 மருத்துவமனை இயக்குனரும், ஐஎம்ஏ ஈரோடு கிளை செயலாளர் கே.அரவிந்த் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார். ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் தலைவர் எஸ்.வி.மகாதேவன் வரவேற்றார். ஐஎம்ஏ ஈரோடு கிளை தலைவர் டாக்டர் டி.சரவணன் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். முகாமில், மூத்த மருத்துவர் ஜி.நாகராஜன், கவுன்சிலர் ஜெயந்தி ராமசந்திரன், உஷா மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் appeared first on Dinakaran.

Tags : Diabetes ,Diagnosing ,Camp ,Erode ,World Diabetes Day ,Heart ,Charity ,Movement ,Monika Diabetes Centre ,Arthanari Mudaliar Charitable Institution ,Kukasree Kripananda Wariyar Swamyal Seva Hospital ,Erode KNK Road ,Diagnosing Camp ,Dinakaran ,
× RELATED நீரிழிவு சிக்கல்களை நிர்வகிக்கும்...