×

பவானிசாகர் அணையில் இருந்துகீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

 

சத்தியமங்கலம்,நவ.12: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து தற்போது அணை நீர்மட்டம் 96.33 அடியாகவும், நீர் இருப்பு 25.9 டிஎம்சி ஆகவும் உள்ளது.

பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நீர் திறப்பு 2,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 2,638 கனஅடியாக இருந்தது.

The post பவானிசாகர் அணையில் இருந்துகீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar Dam ,Bhawani Canal ,Sathyamangalam ,Tirupur ,Karur ,Erode ,Erode district ,Lower Bhavani canal ,Dinakaran ,
× RELATED பவானிசாகர் அணையிலிருந்து மேலும், 7...