×

ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சைக்கிள் திருடிய டிப்டாப் ஆசாமி சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை

ஜெயங்கொண்டம், நவ.5: ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச்சென்ற டிப்டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் எதிரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த தனியார் மருத்துவமனையின் முன்பு ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதனை அப்போது டிப்டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர், திருடும் நோக்கத்தில் அந்த சைக்கிளின் அருகே வந்து ஒன்றும் தெரியாதது போல் நின்று கொண்டிருந்தார்.

பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் சைக்கிளை திருடி, சாலையில் ஓட்டியபடியே சிட்டாக பறந்து சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து சைக்கிளை தொலைத்தவர் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சைக்கிள் திருடிய டிப்டாப் ஆசாமி சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tiptop Asami ,Jayangondam Private Hospital ,JAYANGONDAM ,DIDTOP ASAMI ,Private Hospital ,Jayankondam Taluga Office ,Ariyalur District ,Dinakaran ,
× RELATED அரியலூர் – ஜெயங்கொண்டம் நான்கு...