சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின்படி, உள்கட்டமைப்பு, வணிகம், தொழிற்துறை, வேளாண் சார்ந்த ஏதேனும் ஒரு திட்டத்தை செயல்படுத்த விரும்புபவர்கள், அதை சிறப்பு திட்டமாக அறிவித்து, அதற்கு மாநில அரசின் ஒப்புதலை பெற்று விட்டால், அத்திட்டத்திற்காக அவர்கள் கையகப்படுத்தி வைத்துள்ள நிலத்திற்கு அருகில் உள்ள ஓடைகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளையும் எடுத்துக் கொள்ள முடியும்.
அவற்றுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நிறுவனம் வேறு இடங்களில் உள்ள நிலங்களை அரசிடம் ஒப்படைத்து விட்டால் போதும். இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், இப்போதுள்ள குறைந்த அளவிலான நீர்நிலைகளும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு விடும். எனவே, தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும், அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதை திரும்பப் பெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழ்நாடு சிறப்பு திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.