×

சிறுமிக்கு பாலியல் தொல்லை மளிகை கடைக்காரர் கோர்ட்டில் சரண்

 

காரைக்கால்,அக்.26: காரைக்காலை அடுத்த நெடுங்காடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் அந்தோனிராஜ்(40). இவர், தனது கடைக்கு வந்த அதேபகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை, கடைக்குள் அழைத்து, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, சிறுமியின் பெற்றோர், நெடுங்காடு போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், எஸ். ஐ.ராஜன் தலைமையில் ஆன போலீசார், அந்தோனிராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அந்தோனிராஜ், நேற்று முன்தினம் காரைக்கால் கோர்ட்டில் தானாக சென்று சரண்டர் ஆனார். நீதிப்பதி முருகானந்தம் அந்தோனிராஜை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் சரன் அடைந்த அந்தோனிராஜை போலீஸ் காவலில் எடுக்க நெடுங்காடு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை மளிகை கடைக்காரர் கோர்ட்டில் சரண் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Anthony Raj ,Nedungadu ,Saran ,
× RELATED கொரியர் பெயரில் நடக்கும் நூதன மோசடி