×
Saravana Stores

அன்னூர் தாலுகா அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

அன்னூர், அக்.26: கோவை மாவட்டம், அன்னூர் தாலுக்காவில் கடந்த ஒரு வாரமாக மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி வருகிறது.  இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் தாலுகா அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ள 04254 299908 இந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இதில் நீர் பாதிப்பு குறித்து தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ள பாதிப்பு, மழை நீர் தேங்கியது குறித்து இந்த தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அன்னூர் தாலுகா அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Annur Taluk Office ,Annur taluk ,Coimbatore ,Annoor taluka ,Dinakaran ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...