×

கலெக்டர் அலுவலகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் போராட்டம்

விருதுநகர், அக்.25: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராணி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

ஒன்றிய அரசின் சோம்நாத் கமிட்டி அறிக்கை மற்றும் ஆந்திரா ஓய்வூதியத்திட்டத்தில் இரண்டில் ஒன்றை முதல்வருடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம் என நிதியமைச்சர் 22.7.2023ல் தெரிவித்தபடி முடிவை அறிவிக்க வேண்டும். பணிக்கொடை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி உள்பட அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : CPS Abolition Movement Protest ,Virudhunagar ,Rani ,District Coordinator ,CBSE Eradication Movement ,
× RELATED இளம் பசுமை ஆர்வலர்களுக்கு மணிமுத்தாறில் 4 நாள் பயிற்சி