மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த குண்ணங்குளத்தூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் பா.புருஷோத்தமன். இவரது, தாயார் பா.ஜெயம்மாள் நினைவாக, கிராம மக்கள் இறுதி சடங்குகள் செய்ய உயிர்நீத்தார் மண்டபம் கட்டியுள்ளார். இதனை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி குண்ணங்குளத்தூர் கிராமத்தில் நடந்தது.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு, புதிதாக கட்டப்பட்ட நீத்தார் மண்டபத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்து வைத்தார். பின்னர், அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேட்டி, சேலை உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்….
The post பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.
