×

நிலத்தை அபகரித்து மோசடி மின்கோபுரம் மீது ஏறி பெண் போராட்டம்

பண்ருட்டி, அக். 23: நிலத்தை அபகரித்து மோசடி செய்ததாக மின் கோபுரத்தின் மீது ஏறி ெபண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே செம்மேடு எஸ் ஏரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம், கூலிதொழிலாளி. இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த இவரது உறவினர் சங்கர் என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதற்கிடையில் செல்வத்தின் தாய் பெயரில் இருந்த நிலம் மற்றும் மின் மோட்டார் போன்றவற்றை சங்கர், அவரது பெயருக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த செல்வத்தின் மனைவி எழில்(38) நேற்று காலை நெய்வேலியில் இருந்து வரும் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி சுமார் 65 அடி உயரத்தில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை சமாதானம் செய்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பாதுகாப்பாக கீழே இறக்கினர். இதையடுத்து புகாரின் பேரில், சங்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நிலத்தை அபகரித்து மோசடி மின்கோபுரம் மீது ஏறி பெண் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Panruti ,Selvam ,Semmedu S Eripalayam ,Cuddalore district ,
× RELATED பண்ருட்டி அருகே எல்.என்.புரத்தில் கிராம மக்கள் திடீர் மறியல்