×

கம்பத்தில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டி

கம்பம், அக். 22: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் கம்பம் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டி முகைதீன் ஆண்டவர்புரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலை திருவிழா வட்டார அமைப்பு குழு தலைவரும் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியையுமான கவிதா தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் வட்டார அமைப்பு குழு மக்கள் பிரதிநிதி சாதிக் மற்றும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியை காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறுப்பு மேற்பார்வையாளர் பாரத ராணி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பு பயிற்றுநர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கலைத் திருவிழா போட்டிகளில் கம்பம் வட்டாரத்தை சார்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post கம்பத்தில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டி appeared first on Dinakaran.

Tags : District Level Art Festival Competition ,Gamba ,Kampham ,Gampam district level art festival competition ,Mukaideen ,Andavarpuram ,Art Festival Local Organization Committee ,Government High School ,Kamba ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு