×

விழிப்புணர்வு போட்டி அரசு பள்ளி மாணவி முதலிடம்

பரமக்குடி, அக்.22: ராமநாதபுரம் மாவட்ட அளவிலான எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பால்வினை நோய் விழிப்புணர்வு சுவரொட்டி தயாரித்தல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பாக கலந்து கொண்ட 11ம் வகுப்பு மாணவி அபியா சீரின் மற்றும் சுபலட்சுமி ஆகிய இருவரும் முதல் மற்றும் மூன்றாம் இடத்தினை பெற்றனர். அரசு பள்ளி மாணவிகள் முதல் மற்றும் மூன்றாம் இடத்தினை பெற்றதையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் முதலிடம் பெற்ற அபியா சீரினுக்கு ரூ.5 ஆயிரம், மூன்றாம் இடத்தினை பெற்ற மாணவி சுபலட்சுமிக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். மேலும் மாணவிகளை ஊக்கப்படுத்திய பள்ளி ஓவிய ஆசிரியை அம்பிகாவையும் பாராட்டினார்.

The post விழிப்புணர்வு போட்டி அரசு பள்ளி மாணவி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Ramanathapuram ,
× RELATED வாகன சோதனையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்