×

ராஜிவ் காந்தி குறித்து அவதூறு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

விக்கிரவாண்டி: ராஜிவ் காந்தியை பற்றி அவதூறு பேசிய வழக்கில் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நேமூரில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை இழிவாக பேசியதாக விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ், கஞ்சனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு நேற்று விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக நீதிபதி சத்தியநாராயணன் முன், சீமான் ஆஜரானார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 4ம் தேதிக்கு நீதிபதி சத்தியநாராயணன் ஒத்திவைத்தார்.

The post ராஜிவ் காந்தி குறித்து அவதூறு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Seeman Ajar ,Rajiv Gandhi ,Vikravandi ,Seeman ,Naam Tamil Party ,Nemur ,Villupuram district ,Rajiv ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...