×
Saravana Stores

மேட்டூர் 2வது பிரிவில் மின்உற்பத்தி தொடங்கியது

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடிப்பு சரிசெய்யப்பட்டதை அடுத்து, 2வது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில், இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம், 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகில், 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15ம்தேதி இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. தற்போது கொதிகலன் குழாய் வெடிப்பு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் இரண்டாவது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மேட்டூர் 2வது பிரிவில் மின்உற்பத்தி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Mettur 2nd ,METTUR ,Mettur Thermal ,Salem district ,Mettur 2nd division ,Dinakaran ,
× RELATED 90 ஆண்டுகளில் முதல்முறையாக தூர்வாரப்படும் மேட்டூர் அணை!