×

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள நவீன தானியங்கி சலவை இயந்திரம்

 

அரியலூர், அக்.18: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள நவீன தானியங்கி சலவை இயந்திரம் நேற்று வழங்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பா, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10.65 லட்சம் மதிப்பிலான நவீன தானியங்கி சலவை இயந்திரத்தை வழங்கி, அதனை இயக்கி வைத்து, இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு தூய்மையை பேணிக்காக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், திமுக நகரக் கழகச் செயலாளர் முருகேசன், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அருண் ராஜா, திமுக மாவட்ட பிரதிநிதி ராமு, மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன் ,மதிமுக ஒன்றிய செயலாளர் சங்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

The post அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள நவீன தானியங்கி சலவை இயந்திரம் appeared first on Dinakaran.

Tags : Government Medical College Hospital ,Ariyalur ,Chinnappa ,
× RELATED 2ம் நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்