×

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

 

நாகப்பட்டினம்,அக்.18: திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. அதன்பேரில் திருமருகல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஆண்டனி பிரபு தலைமையில் கங்களாஞ்சேரி மெயின்ரோடு பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.

அப்போது கங்களாஞ்சேரி பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் சிவலிங்கம் ஆகிய இரண்டு பேரின் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்து கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Thirumarukal ,Thirumarukal Food Safety Department ,Officer ,Anthony Prabhu ,Kangalanchery Main Road ,
× RELATED திருக்குவளை, சாட்டியக்குடி பகுதியில்...