×

நடைபாதை பிரச்னை: தம்பதி மீது வழக்கு

 

போடி, அக்.17: போடி ஜக்கமநாயக்கன்பட்டி, ஜக்கம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. சிறுதொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மாரியப்பன் என்பவருக்கும், ராஜாவுக்கும் இடையே நடைபாதை பிரச்னை தொடர்பான முன் விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம், மாரியப்பனின் மனைவி அழகுமணி, ராஜாவின் மனைவி கிருஷ்ணவேணியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர் வீட்டிலிருந்து வெளிவரும் கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணவேணி (52) அளித்த புகாரின் அடிப்படையில், போடி நகர் காவல்நிலைய போலீசார், மாரியப்பன் மற்றும் அழகுமணி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நடைபாதை பிரச்னை: தம்பதி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Raja ,Jakkamman Street ,Bodi Jakkamanayakanpatti ,Mariyappan ,Dinakaran ,
× RELATED போடி ரயில் நிலையத்தில் மண்டல அதிகாரி...