×

பாலமேட்டில் வீட்டில் பட்டாசுகள் பதுக்கியவர் கைது

 

அலங்காநல்லூர், அக். 17: பாலமேட்டில் உள்ள வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். பாலமேட்டில் உள்ள ஒரு வீட்டில், உரிய அசு அனுமதியின்றி தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்வற்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, எஸ்.ஐ அண்ணாதுரை மற்றும் போலீசார் பாலமேடு மணிக்கூண்டு பகுதியில் உள்ள ஒருவரின் என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறையில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள சுமார் 58 பண்டல்கள் பட்டாசுகள் உரிய அனுமதியின்றி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அனுமதி இன்றி வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த கரிகாலன் (58) என்பவரை, பாலமேடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

The post பாலமேட்டில் வீட்டில் பட்டாசுகள் பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Balamet ,Alankanallur ,Palamet ,Diwali ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு