மீனம்பாக்கம்: தொடர் மழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னை விமான நிலையத்துக்கு பயணிகள் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் இன்று 3 வருகை மற்றும் 3 புறப்பாடு விமானங்கள் என 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சென்னையிலிருந்து இன்று காலை 6.55 மணிக்கு, மதுரை செல்லவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை 10.35 மணிக்கு, சேலம் செல்லவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பிற்பகல் 2.40 மணிக்கு, சென்னையில் இருந்து சீரடி செல்லவேண்டிய ஸ்பைஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் மதுரையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சீரடியில் இருந்து இன்று பகல் 1.40 மணிக்கு சென்னை வரவேண்டிய ஸ்பைஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 6 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு என 6 விமானங்கள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக பயணிகள் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாலும், புயல் மிரட்டி கொண்டு இருப்பதாலும் மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என தெரிகிறது.
எனவே, விமான பயணிகள், தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு விமானங்களின் நிலையை கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் பயண திட்டங்களை வகுத்துக்கொள்ளும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post தொடர் மழை, புயல் எச்சரிக்கை: சென்னையில் இன்று 6 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.