×

திருப்பதியில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் மலைப்பாதையில் மண் சரிவு..!!

ஆந்திரா: திருப்பதியில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. திருப்பதி – திருமலை இடையே 2வது மலைப்பாதையில் விநாயகர் கோயில் அருகே மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவு ஏற்பட்டு சாலையில் பாறாங்கற்கள் விழுந்தன. பாறாங்கற்கள் விழுந்தபோது வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மலைப்பாதையில் விழுந்த பாறாங்கற்களை அகற்றும் பணி நடைபெற்று வரக்கூடிய நிலையில், போக்குவரத்து பாதிக்காத வகையில், வாகனங்களை திருமலைக்கு அனுமதிக்கும் பணியும், போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மலைப்பாதையில், மண்சரிவு ஏற்படுவதற்கான, வாய்ப்புகள் உள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என, தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post திருப்பதியில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் மலைப்பாதையில் மண் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Andhra ,Vinayagar temple ,Tirumala ,
× RELATED திருப்பதி கோயிலில் விஐபி-க்களுக்கு...