- வள்ளலார்
- கவர்னர்
- ஓசூர்
- ஹோசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆர்.என்.ரவி
- சுவாமி விவேகானந்தர்
- ராமானுஜர்
- சனாதன தர்மம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வள்ளலாரின் 202வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: நமது புண்ணிய பூமியில் பிறந்த வள்ளலார், சுவாமி விவேகானந்தர், ராமானுஜர் ஆகியோர் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என ஏற்றத்தாழ்வு இல்லை என்றனர். யாரும் உயர்வு இல்லை. யாரும் தாழ்வு இல்லை என்ற கருத்தை பரப்பினர்.
சனாதன தர்மமும் இதையே கூறுகிறது. யாதும் ஊரே- யாவரும் கேளிர் என்ற கோட்பாட்டின் படி, உலகத்தில் அனைவரும் சமம். கொல்கத்தாவில் பிறந்த விவேகானந்தர், ஞானோதயம் பெற்றது தமிழ்நாட்டில் தான். தமிழ்நாடு ஆன்மீக பூமி. ஆனால், தற்போதும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. அவற்றை களைய வேண்டும். வள்ளலாரின் போதனைகளை, பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களில் பாடமாக கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
The post வள்ளலாரின் கருத்துகளே சனாதன தர்மம்: ஆளுநர் பேச்சு appeared first on Dinakaran.