வேலூர்: ‘சட்டசபை மரபை மாற்ற சொல்லும் ஆளுநருக்கு தான் திமிர் இருக்கிறது’ என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூரில் அரசு பொருட்காட்சியை நேற்று முன்தினம் இரவு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். பின்னர், நிருபர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தது தொடர்பாக, ஆளுநர் அவர்கள் இன்று பதில் அளித்துள்ளார். அதில், சட்டசபையில் இருக்கும் மரபைதான் நான் பாட சொன்னேன்’ என்று கூறி உள்ளாரே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ‘ஆளுநர் மாளிகை முதல்வருக்கு இவ்வளவு ஆணவம் நல்லது அல்ல என கூறுவது தவறு.
மரபு அது அல்ல. இத்தனை ஆண்டு காலமாக முதலிலேயே தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியிலேயே தேசிய கீதமும் பாடப்பட்டு வந்திருக்கிறோம். அந்த மரபை மாற்ற சொன்னது அவர்தான், ஆகையினால் தவறு இழைத்தது அவர்தான்.
அவர் பார்த்து முதலமைச்சரை ஆணவம் என்கிறார். ஆனால் அவருக்கு ஆளுநர் என்று திமிரு இருக்கிறது. பெரியார் குறித்து அவதூறாக பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் களத்தில் திமுக மட்டுமே உள்ள நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தலை புறக்கணித்துள்ளதற்கு காரணம், நாங்கள் பலமாக இருக்கிறோம் என்று அர்த்தம்’ என்றார்.
The post சட்டசபை மரபை மாற்ற சொல்கிறார் ஆளுநர் என்ற திமிர் இருக்கிறது: அமைச்சர் துரைமுருகன் ஆவேசம் appeared first on Dinakaran.