×

பீப் கடை போட கூடாது என மிரட்டிய நிர்வாகி பாஜ அலுவலகத்தில் மாட்டிறைச்சி வீச முயற்சி: கோவையில் பரபரப்பு

கோவை: கோவையில் பீப் உணவுக்கடை விவகாரத்தில், தம்பதியை மிரட்டிய பாஜ நிர்வாகியை கைது செய்யகோரி பாஜ மாவட்ட அலுவலகத்தின் மீது மாட்டிறைச்சி வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி, ஆபீதா தம்பதியை பீப் உணவுக்கடை நடத்தக்கூடாது என கோவையை சேர்ந்த பாஜ நிர்வாகி சுப்பிரமணி மிரட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், ரவி, ஆபிதா தம்பதி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு பாஜ கண்டனம் தெரிவித்த நிலையில், சுப்பிரமணிக்கு ஆதரவாக பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பாஜவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுப்பிரமணியை கைது செய்யக்கோரியும் ஆதித்தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட பாஜ அலுவலகத்தின் மீது மாட்டிறைச்சி வீசும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். அதன்படி ஆதித்தமிழர் கட்சியினர் மாவட்ட தலைவர் வின்சென்ட் தலைமையில் பாஜ அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்போது ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலையில் மாட்டிறைச்சியை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

The post பீப் கடை போட கூடாது என மிரட்டிய நிர்வாகி பாஜ அலுவலகத்தில் மாட்டிறைச்சி வீச முயற்சி: கோவையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Coimbatore ,Ravi ,Abeetha ,Udayampalayam ,Dinakaran ,
× RELATED தவெக அரசியல் இயக்கமாக பரிணாமம் அடைவது சந்தேகமே: வானதி சீனிவாசன்