×

புகையிலை பறிமுதல்

 

திண்டுக்கல், அக். 10: சாணார்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், ஜோதிமணி, வசந்தன் ஆகியோர் சோதனை நடத்தினர். அப்போது தவசிமடையை சேர்ந்த மைக்கேல் அந்தோணி (50) மளிகை கடை, வீட்டில் சோதனை செய்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 65 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து சோதனை நடைபெறும், மீண்டும் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தெரிவித்தார்.

 

The post புகையிலை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Selvan ,Jyothimani ,Vasanthan ,Chanarpatti ,Michael Anthony ,Thavasimadai ,Dinakaran ,
× RELATED வீட்டிலிருந்து அரசியல் செய்வது விஜய்...