×

கர்நாடகா வால்மீகி கழக முறைகேட்டில் மாஜி அமைச்சர் முதல் குற்றவாளி: அமலாக்கத்துறை தகவல்

பெங்களூரு: கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான ரூ.187 கோடி முறைகேடு செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக எஸ்.சி, எஸ்.டி நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத்துறை, பெங்களூருவில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது .

இதுதொடர்பான அமலாக்கத்துறையின் அறிக்கையில், காங்கிரஸ் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான நாகேந்திரா தான் வால்மீகி முறைகேடு வழக்கில் முதல் குற்றவாளி மற்றும் இந்த முறைகேட்டின் மூளையாக செயல்பட்டவர். அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.43.33 கோடி உட்பட மொத்தம் ரூ.187 கோடி பணம் பின்னர் பல போலி வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. ரூ.20.19 கோடி பல்லாரி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரின் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

The post கர்நாடகா வால்மீகி கழக முறைகேட்டில் மாஜி அமைச்சர் முதல் குற்றவாளி: அமலாக்கத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : BENGALURU ,Valmiki Tribal Development Corporation ,Karnataka government ,Nagendra ,SC ,ST ,Enforcement department ,Dinakaran ,
× RELATED பெண் அமைச்சரை ஆபாசமாக பேசிய விவகாரம்;...