×

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

சென்னை: வில்லிவாக்கம் ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் மீனாட்சி தேவி (38). கடந்த 23ம் தேதி செல்போனில் இருந்து மீனாட்சி தேவியை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், மும்பையில் இருந்து பேசுவதாகவும் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் எனக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்களது பெயரில் பெடாக்ஸ் என்ற கூரியரில் மும்பையில் இருந்து ஈரானுக்கு ஒரு கூரியர் சென்றுள்ளது. அதில் 4 காலாவதியான பாஸ்போர்ட் மற்றும் 450 கிராம் போதைப்பொருள் உள்ளது. உங்களது டெபிட் கார்டில் இருந்து ரூ93 ஆயிரம் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி மிரட்டியுள்ளார்.

அது உங்களது அக்கவுன்ட் தானா என்பதை பரிசோதனை செய்ய நாங்கள் தரும் அக்கவுன்ட்டுக்கு ரூ1 லட்சம் என இரு முறை அனுப்புங்கள் என கூறியுள்ளனர். ரேணுகா தேவியும் இருமுறை பணத்தை அனுப்பி உள்ளார். 2 லட்சம் அனுப்பிய பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.

The post மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Chennai ,Meenakshi Devi ,Villivakkam ,Jaganathan ,
× RELATED அதிர்வலை மூலம் மருந்து செலுத்தும்...