×

காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் அடையாறில் புதிய கிளை திறப்பு

சென்னை: காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ், தனது 66வது கிளையும், சென்னை அடையாறில் பிரத்யேக 6வது கிளையை திறந்துள்ளது. இதனை, புகழ்பெற்ற தருமை ஆதீனம் 27வது குரு மஹா சன்னிதானம்  லஸ்ரீகைலா மாசிலாமணி தேவகி ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் திறந்து வைத்தார். இந்த கடையில் பனாரசி, படோலா, கோட்டா, காஞ்சிபுரம், பைத்தானி, ஆர்கன்சா மற்றும் குப்பதம் போன்ற பல்வேறு வகையான புடவைகள் உள்ளிட்ட பிரீமியம் தயாரிப்புகள் உள்ளன.

இதுகுறித்து சாய் சில்க்ஸ் கலாமந்திர் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பிரசாத் சலாவடி கூறுகையில், “சாய் சில்க்ஸ் (கலாமந்திர்) லிமிடெட் (சாய் சில்க்ஸ் அல்லது எஸ்எஸ்கேஎல்) என்பது, 2019, 2020 மற்றும் 2021 நிதியாண்டில் (டெக்னோபாக் அறிக்கையின்படி) வருமானம் மற்றும் வரிக்கு பிந்தைய லாபத்தின் அடிப்படையில் தென்னிந்தியாவில் எத்னிக் ஆடைகளின், குறிப்பாக சேலைகளின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்த புதிய எஸ்எஸ்கேஎல் பார்மேட் ஸ்டோர் எங்கள் முழு அளவிலான பிரீமியம் பட்டுப் புடவைகள் மற்றும் காஞ்சிபுரம் புடவைகளை வழங்குகிறது. மூலோபாய ரீதியாக ஒரு பிரதான பகுதியில் அமைந்துள்ள புதிய ஸ்டோர், எங்கள் கிளஸ்டர் அடிப்படையிலான அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். வரமகாலட்சுமி ரீடெய்ல் பிராண்ட் வடிவம் 2011ம் ஆண்டு பெங்களூரு சிக்பெட்டில் முதல் கடை திறப்புடன் தொடங்கப்பட்டது. பின்னர் பெங்களூரு, ஐதராபாத், சென்னை, விஜயவாடா, நெல்லூர் போன்ற நகரங்களில் தொடங்கப்பட்டது.

வரமகாலட்சுமி ஸ்டோர்கள் மிகவும் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் காஞ்சிபுரம் கலாச்சாரத்தில் பிராண்டின் வேர்களை பிரதிபலிக்கின்றன. இது கைத்தறி புடவை வியாபாரத்தை புதுப்பித்து, காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் மற்றும் பிற கைத்தறி மற்றும் நிகழ்வுகளுக்கான புடவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்குகிறது. சாய் சில்க்ஸ் என்பது கலாமந்திர், வரமகாலட்சுமி சில்க்ஸ், மந்திர் மற்றும் கேஎல்எம் பேஷன் மால் உள்ளிட்ட 4 ஸ்டோர் வடிவங்களை கொண்டுள்ளது. இது சந்தையின் பல்வேறு பிரிவுகளுக்கு தயாரிப்புகளை வழங்குகிறது,’’ என்றார்.

The post காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் அடையாறில் புதிய கிளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Varamakhalakshmi Silks ,Chennai ,Kanchipuram Varamakshmi Silks ,Daruma Adina ,Guru Maha Sannithanam Lasrigaila ,Masilamani ,Devaki ,Gnanasambanda Paramacharya Swamis ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...