×

ஆர்எம்கே பள்ளியில் தேசிய அளவிலான சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர்: கல்வி குழுமங்களின் தலைவர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே ரெசிடென்ஷியல் சீனியர் செகண்டரி பள்ளியில் தமிழ்நாடு அமெச்சுர் நெட்பால் சங்கம் மற்றும் இந்திய நெட்பால் சம்மேளனம் இணைந்து நடத்தும் 30வது தேசிய அளவிலான சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர் நேற்றுமுன்தினம் துவங்கியது. சப் ஜூனியர் பிரிவில் 16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் என 2 பிரிவுகளில் 28 மாநிலங்களை சேர்ந்த 54 அணிகளை சேர்ந்த 800 வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.

ஆர்எம்கே கல்விக் குழுமங்களின் நிறுவனர், தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தொடங்கி வைத்தார். செயலாளர் யலமஞ்சி பிரதீப், துணைத் தலைவர்கள் ஆர்.எம்.கிஷோர், துர்காதேவி பிரதீப், பொருளாளர் சவுமியா கிஷோர், இயக்குனர் ஆர்.ஜோதி நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய நெட்பால் சம்மேளத்தின் தலைவர் சுமன் கவுசிக், பொதுச்செயலாளர் விஜேந்தர் சிங், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளர் செந்தில் வி.தியாகராஜன் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர். இதில் தமிழ்நாடு நெட்பால் சங்கத்தின் தலைவர் பி.செல்வராசு செயலாளர் வைசாலி, துணைத் தலைவர் வைசாலி சுப்ரமணியம், ஆர்எம்கே ரெசிடென்சியல் பள்ளி முதல்வர் ஷப்னா சங்க்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், 4 நாட்கள் நாக் அவுட் முறையில் நடத்தப்படும் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதி, அரையிறுதி போட்டிகளுக்கு தேர்வாகி இறுதி போட்டியில் வெற்றி வாகை சூடும் அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் இந்த போட்டிகளில் சிறந்து விளங்கி தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் 20 வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஆர்எம்கே பள்ளியில் தேசிய அளவிலான சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர்: கல்வி குழுமங்களின் தலைவர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : National Level Sub Junior Netball Championship Series ,RMK School ,Chennai ,30th National Level Sub Junior Netball Championship Series ,Tamil Nadu Amateur Netball Association ,Netball Federation of India ,RMK Residential Senior Secondary School ,Kavarappettai ,Chennai.… ,of Educational Groups ,Dinakaran ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...