×

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், வரத்து அதிகரிப்பு காரணமாக காய்கறிகள் விற்பனை நேற்று குறைந்து காணப்பட்டது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ₹15க்கும், ஒரு கிலோ வெங்காயம் ₹15க்கும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ₹15க்கும், ஒரு கிலோ முள்ளங்கி ₹15க்கும், ஒரு கிலோ புடலங்காய் ₹15க்கும், ஒரு கிலோ சேனைக்கிழங்கு ₹25க்கும், ஒரு கிலோ முருங்கைக்காய் ₹70க்கும், ஒரு கிலோ வெள்ளரிக்காய் ₹7க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், பீன்ஸ் ₹50, பீட்ரூட் ₹45, பாகற்காய் ₹20, சுரைக்காய் ₹10, கத்திரிக்காய் ₹20, முட்டைக்கோஸ் ₹8, குடை மிளகாய் ₹35, கேரட் ₹45, சவ்சவ் ₹10, தேங்காய் ₹25, கொத்தமல்லி (50 கட்டுகள்) ₹130, வெள்ளரிக்காய் ₹7, முருங்கைக்காய் ₹70, கருணைக்கிழங்கு ₹65, இஞ்சி ₹50, பச்சை மிளகாய் ₹15, வாழைக்காய் (ஒன்றின் விலை) ₹3.50, வெண்டைக்காய் ₹30, கோவைக்காய் ₹40, மாங்காய் ₹50, வெங்காயம் ₹15, சாம்பார் வெங்காயம் ₹30, உருளைக்கிழங்கு ₹15, முள்ளங்கி ₹15, சேனைக்கிழங்கு ₹25க்கு விற்பனை செய்யப்பட்டது.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Chennai ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்...