- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- துணை முதலமைச்சர்
- தி.மோ.அன்பராசன்
- காஞ்சிபுரம்
- பவளவிழா
- தமோ அன்பரசன்
- திமுக பவள விழா
- உதயநிதி ஸ்டாலின்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பவள விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு செய்யும் பணியினை ஆய்வு செய்தபோது, ‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நாளையே துணை முதல்வராக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் வரும் 28ம்தேதி மாலை 5 மணிக்கு திமுக பவளவிழா பொதுக்கூட்டம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், தோழமை கட்சிகளை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், திமுக தலைவர்கள், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்துத்துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளையே துணை முதல்வராக ஆகும் வாய்ப்பு அறிவிக்கப்படலாம், அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் அல்லது காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வராக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது’ என்றார். ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ ஏழிலரசன், மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன்.
ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி, மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன், மாநகர நிர்வாகிகள் முத்துசெல்வன், சுப்பராயன், பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், வெங்கடேசன், திலகர், சாட்சி சண்முகசுந்தரம், மாநகர நகராட்சி கவுன்சிலர்கள் கமலக்கண்ணன், த.விசுவநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் இ.ஜாபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, முப்பெரும் பவள விழா நடைபெறும் இடத்தினை அமைச்சர் உள்ளிட்ட எம்பி, எம்எல்ஏக்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நாளையே துணை முதல்வராக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை: பவள விழா ஏற்பாடு பணி ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி appeared first on Dinakaran.