×

23 வயது காதலியை மணந்த 18 வயது கால்பந்து வீரர்

லண்டன்: பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளம்கால்பந்து வீரர் என்ட்ரிக் ஃபெலிப் மோரேரா டி சோசா. 18வயதான இவர் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட்டில் அணியில் இணைந்து, தனது அபார திறமையை வெளிப்படுத்தியதன் மூலம், உலகளாவிய கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 11 சர்வதேச போட்டிகளில் 3 கோல் அடித்துள்ளார் இவர், மாடல் அழகியான 23 வயது காதலி கேப்ரிலி மிராண்டாவை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் படத்தை பகிர்ந்து இதனை இருவரும் அறிவித்துள்ளனர். இந்த புதுமண தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில், என்ட்ரிக்கின் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

The post 23 வயது காதலியை மணந்த 18 வயது கால்பந்து வீரர் appeared first on Dinakaran.

Tags : London ,Entric Felipe Moreira de Sosa ,Brazil ,Real Madrid ,Spain ,
× RELATED முந்தைய மதிப்பீட்டை காட்டிலும் 2...