×

2024ம் ஆண்டின் ‘சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர்’ விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்த ஜஸ்ப்ரித் பும்ரா

துபாய்: ஐசிசி வழங்கும் 2024ம் ஆண்டின் ‘சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர்’ விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா இடம்பெற்றுள்ளார்

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணிக்காக வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், மெல்போர்னில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.

2024ஆம் ஆண்டில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் மிகவும் மோசமாக செயல்பட்ட நிலையில் ஜஸ்பிரித் பும்ரா இந்த ஆண்டு சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார். இதன் காரணமாக ஐசிசி வழங்கும் 2024ம் ஆண்டின் ‘சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர்’ விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா இடம்பெற்றுள்ளார்.

பரிந்துரைப் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் மற்றும் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், பும்ராவின் அற்புதமான சாதனை மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவர் 2024 இன் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14.92 ஆவரேஜ் உடன் 71 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

The post 2024ம் ஆண்டின் ‘சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர்’ விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்த ஜஸ்ப்ரித் பும்ரா appeared first on Dinakaran.

Tags : Jasprit Bumrah ,Dubai ,India ,ICC ,Melbourne Test ,Dinakaran ,
× RELATED டீம் ஆப் தி இயர் 2024 கேப்டனாக பும்ரா...