×

உலக ரேபிட் செஸ் போட்டி; இந்திய வீராங்கனை கொனேரு சாம்பியன் பட்டம் வென்றார்

நியுயார்க்: அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக, மகளிர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்தோனேஷியாவின் ஐரீன் சுகாண்டர் – இந்தியாவின் கொனேரு ஹம்பி மோதினர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொனேரு, ஐரீனை தோற்கடித்தார்.

இதையடுத்து, புள்ளிப்பட்டியலில் 8.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து ரேபிட் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை அவர் வென்றார். இந்த பட்டத்தை அவர் இரண்டாவது முறையாக தற்போது பெற்றுள்ளார். ஆண்கள் பிரிவில் ரஷ்யாவின் வோலோடர் முர்ஸின் (18), 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

The post உலக ரேபிட் செஸ் போட்டி; இந்திய வீராங்கனை கொனேரு சாம்பியன் பட்டம் வென்றார் appeared first on Dinakaran.

Tags : World Rapid Chess Championship ,Koneru ,New York ,Indonesia ,Irene Sukander ,India ,Koneru Humpy ,New York City, USA ,Irene.… ,Dinakaran ,
× RELATED உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி; இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன்!