×

இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

இலங்கை அணி, நியூசிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டி20 தொடர் தொடங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

173 ரன்களை துரத்திய இலங்கை அணி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. அசால்டாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் ராபின்சன் 41 ரன்களும், சாப்மேன் 42 ரன்களும், மிட்செல் ஹே 41 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், பதிரானா மற்றும் துஷாரா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. 3வது டி20 போட்டி வரும் ஜன.02ம் தேதி தொடங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜன.05ம் தேதி தொடங்குகிறது.

The post இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : New Zealand ,2nd T20 ,Sri Lanka ,T20 ,ODI ,D20 ,Dinakaran ,
× RELATED இலங்கையை ஒயிட்வாஷ் செய்ய...