×

அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பில் இருந்து மாஜி எம்எல்ஏ நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் (முன்னாள் எம்எல்ஏ) இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அதிமுக கொள்கை பரப்பு மற்றும் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் – ரதிமீனா பி.எஸ்.சேகர் (நகர் காலனி, மெயின் ரோடு, கும்பகோணம், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம்), அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் – ப.இளவழகன் (அரியலூர் சட்டமன்ற தொகுதி, அரியலூர் மாவட்டம்), ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் – எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் (சாத்தூர் சட்டமன்ற தொகுதி, விருதுநகர் கிழக்கு மாவட்டம்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பில் இருந்து மாஜி எம்எல்ஏ நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Maji MLA ,Deputy Secretary ,Adimuka MGR Youth Team ,Edappadi Palanisami ,Chennai ,Edapadi Palanisami ,MLA ,S. R. Rajavarman ,Maji ,Aitmuka MGR Youth Team ,Dinakaran ,
× RELATED பில்லி சூனியம், செய்வினை சிறப்பாக...