- காஞ்சிபுரம்
- கிஷன்
- நளன்
- காலோ இந்தியா விளையாட்டு
- சென்னை
- மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
காஞ்சிபுரம்: யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த சிறுவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சென்னையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட கிஷன் மற்றும் நளன் ஆகியோர் மிக சிறப்பாக யோகா செய்து பாரத பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தினர். இதையடுத்து காஞ்சி மடத்தில் நேற்று நடந்த திருக்கோயில் வழிபாட்டுக் குழுவின் 15ம் ஆண்டு விழாவில் சாதனை படைத்தவர்களுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த சிறுவர்கள் கடந்த 2019ம் ஆண்டில் தமிழ் பாடல் வரிகளை மனப்பாடமாக கூறி உலக சாதனை நிகழ்த்தினர்.
The post யோகாவில் கின்னஸ் சாதனை: சிறுவர்களுக்கு வாழ்த்து appeared first on Dinakaran.