×

ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்களை வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க சதி: போலீசார் விசாரணை

ஜெய்பூர்: ராஜஸ்தானில் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்களை வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டம் புலேரா – அகமதாபாத் வழித்தடத்தில் சரத்னா மற்றும் பங்காட் ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்டிப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்து சிமெண்ட் கற்களை அகற்றினர். இந்த சதி சம்பவத்தால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் புலேரா – அகமதாபாத் வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சதி குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்களை வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க சதி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Jaipur ,Rajasthan ,Sarathna ,Bangad ,Pulera ,Ahmedabad ,Ajmer district of Rajasthan ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானில் பயங்கரம் விபத்தில்...