- ரிஷப் பண்ட்
- கங்குலி
- மும்பை
- இந்தியா
- வங்காளம்
- செப்பகம் ஸ்டேடியம்
- சென்னை
- ராக்கித் ஷர்மா
- விராத் கோலி
- ரிசப் பண்ட்
- தின மலர்
மும்பை : இந்தியா, வங்கதேசம் அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி போன்ற சீனியர் வீரர்களும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். முகமது ஷமியை தவிர மற்ற சீனியர்கள் அனைவரும் அணியில் இருக்கிறார்கள். ஜெய்ஸ்வால், கில், சர்ப்ராஸ்கான் போன்ற இளம் வீரர்களும் இந்த தொடரில் விளையாடுகிறார்கள். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கக்கூடிய இளம் வீரர் யார் என்பது குறித்து கங்குலி கூறியதாவது:- டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது ரிஷப் பன்ட் தான். அவர் விபத்திற்கு பிறகு தற்போது உடனடியாக அணிக்கு திரும்பியதை நினைத்து எனக்கு எந்த ஆச்சரியமும் கிடையாது. அவர் நிச்சயம் இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்.
இன்னும் சொல்லப்போனால் தொடர்ந்து ரிஷப் பன்ட், இதே மாதிரி விளையாடினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல் டைம் சிறந்த வீரராக ரிஷப் பன்ட் விளங்குவார். என்னைப் பொறுத்தவரை ரிஷப் பன்ட் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்க வேண்டும். அவருக்கு இருக்கும் திறமை நிச்சயம். இதேபோல் சிறப்பாக விளையாடுவார். நிச்சயம் அவர் ஒருநாள் டி 20 கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக திகழ்வார் என்று நம்புகிறேன். கிட்டத்தட்ட 21 மாதங்களுக்கு பிறகு ரிஷப் பன்ட், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பி இருக்கிறார். இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பன்ட், 2271 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் 5 சதங்கள் அடங்கும். அவருடைய சராசரி 43 என்ற அளவில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய மண்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பன்ட் பெற்றிருக்கிறார். இதுவரை 76 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1209 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 127 சராசரி வெறும் 23 ஆகும். இதே போன்று 31 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள பன்ட், 871 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 33 ஆகும். இதில் ஒரு சதம் அடங்கும்.
The post டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பன்ட் சாதிப்பார்: கங்குலி நம்பிக்கை appeared first on Dinakaran.