×
Saravana Stores

பெண் மருத்துவர் பலாத்கார கொலை: கல்லூரி மாஜி முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.! கொல்கத்தாவில் பரபரப்பு

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தியது. கடந்த மாதம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் 31 வயது பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே சந்தீப் கோஷ் மற்றும் அவரது பெலியாகட்டா வீடு உட்பட அவரது மூன்று கூட்டாளிகளுக்கு தொடர்புடைய இடங்களிலும், ஹவுரா மற்றும் சுபாஸ்கிராமில் உள்ள இரண்டு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை இன்று நடத்தியது. மருத்துவமனையின் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பிரசூன் சாட்டர்ஜியின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘சந்தீப் கோஷ் தனது பதவிக் காலத்தில் மருத்துவமனையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐ) கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை பணமோசடி வழக்கை பதிந்து, அவரது சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது. முக்கிய எலக்ட்ரானிக் ஆதாரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றன.

The post பெண் மருத்துவர் பலாத்கார கொலை: கல்லூரி மாஜி முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.! கொல்கத்தாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Majhi ,Kolkata ,Kolkata Medical College ,Hospital ,Sandeep Ghosh ,Enforcement Department ,Kolkata RG Ghar Medical College ,
× RELATED ஒடிசா எதிர்கட்சி தலைவரான மாஜி...