×

தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து கிடுகிடு உயர்வு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3762 கனஅடியில் இருந்து 13,982 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.17 அடியாக உள்ளது. குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீரவரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 6,300 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2434 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 84 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 311 மில்லியன் கன அடியாக உள்ளது.

கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பவானி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆற்றில் இறங்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

The post தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar Dam ,Dinakaran ,
× RELATED பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு