- பாரா ஒலிம்பிக்
- இந்தியா
- பாரிஸ்
- பாராலிம்பிக் விளையாட்டுக்கள்
- பிரான்ஸ்
- டோக்கியோ பாரா ஒலிம்பிக்
- தின மலர்
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி 1968ம் ஆண்டு முதல் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக டோக்கியோ பாரா ஒலிம்பிக்(2020) போட்டியில் 5தங்கம், 8 வெள்ளி, 6வெண்கலம் உட்பட 19 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது. அதற்கு முன்பு வரை அதிகபட்சமாக 4 பதக்கங்களை தான் இந்தியா வென்று இருந்தது.
ஆனால் இந்த முறை பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 9வௌ்ளி, 10வெண்கலம் உட்பட 24பதக்கங்களை குவித்துள்ளது. இந்த பாரா ஒலிம்பிக் போட்டி நாளை மறுதினம் முடிவடைகிறது.
கூடவே சிம்ரன் நேற்று 100மீ(டி12) பந்தயத்தின் பைனலுக்கு முன்னேறி இருக்கிறார். அதனால் இந்த பதக்க எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது.
The post பாரா ஒலிம்பிக்கில் புதிய சாதனை: பதக்கங்கள் குவிக்கும் இந்தியா appeared first on Dinakaran.