- யுஎஸ் ஓபன்
- ஜோனிக் பாவி
- ஜெசிகா பெகுலா
- நியூயார்க்
- கிராண்ட் ஸ்லாம்
- இகா ஸ்வயடெக்
- போலந்து
- யுஎஸ் ஓபன் டென்னிஸ்
- ஜனிக் சின்னர்
- ஜெசிகா பெகுலா
- தின மலர்
நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த கால்இறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் 23 வயதான இகா ஸ்வியாடெக், 6ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் 30 வயது ஜெசிகா பெகுலா மோதினர். இதில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஜெசிகா வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றில் முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார். நேற்றிரவு நடந்த மற்றொரு கால்இறுதி போட்டியில், கரோலினா முச்சோவா 6-1, 6-4 என்ற செட் கணக்கில், பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாத் மியாவை வென்றார்.
அரையிறுதியில் நாளை அதிகாலை சபலென்கா-நவேரா, ஜெசிகா பெகுலா-முச்சோவா மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த கால்இறுதியில் இங்கிலாந்தின் ஜாக் டிராப்பர் 6-3, 7-5, 6-2 என்ற செட் கணக்கில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தினார். இன்று காலை நடந்த 4வது மற்றும் கடைசி கால்இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், 5ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் மோதினர். இதில் ஜானிக் சின்னர் 6-2, 1-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஜானிக் சின்னர், ஜெசிகா பெகுலா அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.