×

ரூ.26,000 கோடியில் போர் விமான இன்ஜின்கள் கொள்முதல்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய கடற்படைக்கு 42 போர் விமானங்கள் தேவை உள்ள நிலையில், டெல்லியில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் சுகோய்- 30எம்கேஐ போர் விமானங்களுக்கான 240 புதிய என்ஜின்களை வாங்குவதற்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அதன் கோராபுட் பகுதியில் உள்ள ஆலையில் அவற்றை தயாரிக்க ரூ.26,000 கோடி ஒப்பந்தம் பெற உள்ளது.

ஏஎல்-31 ஃஎப்பி இன்ஜின்கள் 8 வருட காலத்திற்குள் வழங்கப்பட உள்ளன. இந்த விமான இன்ஜின்கள் ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது. இதில் 54 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியை கொண்டிருக்கும். பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகம் 240 இன்ஜின்கள் வாங்குவதற்கான ஆர்டரை அனுமதித்துள்ளது. சுகோய்-30 எம்கேஐ போர் விமானம் இந்திய கடற்படையின் மிக சக்திவாய்ந்ததாகும்.

The post ரூ.26,000 கோடியில் போர் விமான இன்ஜின்கள் கொள்முதல்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : EU Cabinet ,NEW DELHI ,Indian Navy ,China ,Pakistan ,EU ,Delhi ,Dinakaran ,
× RELATED ரூ.2,817 கோடியில் டிஜிட்டல் வேளாண் செயல்...