×

முதல்வர் பதவி கேட்பேன்: பாஜவில் சலசலப்பு

புதுடெல்லி: அரியானாவில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாஜ மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அனில் விஜ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இதுநாள் வரையிலும் கட்சியிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் என்னை சந்திக்கும் மக்கள், மூத்த தலைவரான நான் ஏன் முதல்வராகக் கூடாது என கேட்கிறார்கள்.

எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று, இம்முறை அரியானாவில் பாஜ வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை எனக்கு தருமாறு கேட்பேன். என்னை முதல்வராக்கினால் அரியானாவின் விதியை மாற்றிக் காட்டுவேன்’’ என்றார். இத்தேர்தலில் தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாஜ பிரசாரம் செய்யும் நிலையில் விஜ் பேச்சு அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post முதல்வர் பதவி கேட்பேன்: பாஜவில் சலசலப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,New Delhi ,minister ,Anil Vij ,Dinakaran ,
× RELATED புல்டோசர் இடிப்பு வழக்கில் தீர்ப்பு...