×

தேசிய ஊட்டச்சத்து வாரம்: இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டுகோள்

ஆரோக்கியமான உடல்நலனுக்கு ஊட்டச்சத்து மிக அவசியம். இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக 1982 முதல் மத்திய அரசு சார்பில் தேசிய ஊட்டசத்து வாரம் செப். 1 முதல் செப். 7 கடைபிடிக்கப்படுகிறது. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது போல நலமுடன் இருப்பதற்கு இயற்கை, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். உணவில் பழங்கள், காய்கறி, புரதம், இறைச்சி என அனைத்துவித சத்துகளும் சமச்சீரான அளவில் இடம் பெறவேண்டும். பாரம்பரிய இயற்கை உணவில் கவனம் செலுத்துவது நல்லது.

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரசி ரகங்களான, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, காட்டுயாணம், ரத்தசாலி, இலுப்பைப்பூ சம்பா, கருடன் சம்பா, தங்க சம்பா, சிவப்பு கவுனி, பூங்கார் குள்ளக்கார் அரிசிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட அவல், சத்துமாவுகள், இடியாப்பம், புட்டு, கஞ்சிவகைகள், பலகாரங்கள் போன்ற உணவுகளில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதுபோல சிறுதானியங்களில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளதால் வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் சிறுதானியங்கள் சார்ந்து உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

உடல்நலத்துக்கு முக்கியமானது ஆரோக்கியமான உணவு. இதய நோய்களைத் தடுப்பதற்கும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது சிறந்த தீர்வாகும். ஊட்டச்சத்து நிபுணர்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது இதயத்துக்கு நல்லது. பீன்ஸ், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைவான கொழுப்பு கொண்ட பால் பொருட்கள், இறைச்சி, மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று பாரம்பரிய உணவுகளில் மருத்துவ குணமுள்ள பொருட்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் .

மேலும் பழங்கள், தானியங்கள், கீரை வகைகள், பயறு வகைகள் போன்றவையே நமது பாரம்பரிய உணவுகளாக கருதப்பட்டது. பாரம்பரிய உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை பேனக் கூடியதாகவே இருப்பது சிறப்பிற்குரியதாகும். பாரம்பரிய சமையலில் முன்னோர்கள் காலை உணவில் சாமை, கேழ்வரகு என்பவற்றை சேர்த்து கொள்வதோடு மதியத்திற்கு தானியங்கள் மற்றும் அரிசியையும் உண்டு வந்தனர். சங்ககால மக்களின் உணவு முறையானது உடல் நலத்திற்கு சிறந்ததாகவே காணப்பட்டதோடு உணவினை ஆரோக்கியமாக சமைப்பதிலும் சிறந்து விளங்கினார்கள்.

சங்ககாலத்தில் உணவுகளை நீரிட்டு அவித்தல் மற்றும் வறுத்தல், சுடுதல் போன்ற முறைகளை பயன்படுத்தி உணவுகளை சமைத்தனர். மேலும் அத்திப்பழம், இலுப்பைப்பழம், கொன்றைப்பழம், நாவற்பழம் போன்றவையும் தானியங்கள் மற்றும் சோற்றினையும் அதிகம் உண்டு வந்தனர். உப்பு, சர்க்கரை போன்றவற்றைக் கூடுமானவரை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவுடன் எடுத்துக்கொள்வது அல்லது தவிர்த்துவிடுவது நல்லது. ஆனால், அதற்காக முற்றிலும் கொழுப்புச்சத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை. பாதாம், அக்ரூட், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இதயத்திலுள்ள கெட்ட கொழுப்புச்சத்தைக் குறைக்க இந்த உணவுப்பொருட்கள் உதவுகின்றன.ஒரு நாளில், மூன்று அல்லது ஐந்து முறை பழங்கள், காய்கறிகளைக் கொஞ்சமாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது இதய நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளாக உள்ளது. இன்று நாம் உண்ணும் உணவு வகைகளில் இருந்து பெரிதும் வேறுபட்டதே பாரம்பரிய உணவுகளாகும். அதாவது இன்று பெருவாரியாக நாம் உண்ணும் துரித உணவுகள் நமக்கு பல்வேறுபட்ட நோய்களையே உண்டு பண்ணுகின்றன.

ஆனால் பாரம்பரிய உணவுகளானவை நோயற்ற வாழ்க்கையை வாழ்வதற்கும் சிறந்த உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் உதவுகிறது. அக்கால உணவுகளில் முக்கியமான திணையானது வயிறு, குடல் புண்களை ஆற்றக் கூடியதாக உள்ளதோடு சாமை, வரகு போன்றவை சக்கரை நோயை கட்டுப்படுத்தவும், விட்டமின் கனியுப்புக்களை கொண்டதாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் காணப்படுகிறது. முன்னோர்கள் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் திகழ்ந்தமைக்கான பிரதானமான காரணம் அவர்கள் உண்ட உணவுகளே ஆகும். பாரம்பரிய உணவுகளை மீண்டும் நாம் நமது உணவு முறையில் சேர்த்துக்கொள்கின்ற போதே நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும். நாம் அதனை கடைபிடித்து நம்முடைய வரும் தலைமுறையை ஊட்டச்சத்து மிகுந்த தலைமுறையாக மாற்றுவது நம் கடமை.

சங்ககால மக்களின் உணவு முறையானது உடல் நலத்திற்கு சிறந்ததாகவே காணப்பட்டதோடு உணவினை ஆரோக்கியமாக சமைப்பதிலும் சிறந்து விளங்கினார்கள். சங்ககாலத்தில் உணவுகளை நீரிட்டு அவித்தல் மற்றும் வறுத்தல், சுடுதல் போன்ற முறைகளை பயன்படுத்தி உணவுகளை சமைத்தனர். மேலும் அத்திப்பழம், இலுப்பைப்பழம், கொன்றைப்பழம், நாவற்பழம் போன்றவையும் தானியங்கள் மற்றும் சோற்றினையும் அதிகம் உண்டு வந்தனர்.

The post தேசிய ஊட்டச்சத்து வாரம்: இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : National Nutrition Week ,National ,
× RELATED உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிக்கு புதிய திட்டம்: ஒன்றிய அரசு முடிவு