×
Saravana Stores

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி: 105 காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகம் உதவி பொது மேலாளர், மேலாளர் உள்ளிட்ட 26 துறைகளில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் காலியாக உள்ள 105 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 28ம் தேதி கடைசி தேதி. ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதனை அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மேற்கொள்ளலாம். எழுத்துத் தேர்வு நவம்பர் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் தாள் தேர்வு தமிழ்த் தகுதித் தாள், பொது அறிவு மற்றும் திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தேர்வாக நடைபெறுகிறது.

இந்த தேர்வு நவம்பர் 18ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். தமிழ் தகுதிதாள் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து பாடம் சார்ந்த தேர்வாக இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே வெளியிடப்படும். முதல் தாள், இரண்டாம் தாள் எழுத்துத் தேர்வுக்கு 450 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும் என மொத்தம் 510 மதிப்பெண் வழங்கப்படும். கல்வி தகுதி, வயது உள்ளிட்ட முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

The post ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி: 105 காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNBSC ,Chennai ,TNPSC ,Tamil Nadu State Industrial Development Corporation ,Dinakaran ,
× RELATED தேர்வு நடத்தப்பட்ட 4 மாதத்தில் குரூப் 4...