×

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது 2 பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலி

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். சென்னை அடுத்த தாழம்பூர், அண்ணா தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ஸ்ரீசுதன் (13). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்தவர் ஜஸ்வந்த் (12). நண்பர்களான 2 பேரும், பள்ளி விடுமுறை என்பதால் தனது நண்பர்களான 2 பேருடன் செம்மஞ்சேரியில் உள்ள வாழ்வெட்டி தாங்கல் குளத்தில் குளிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை சென்றனர்.

அங்கு, நண்பர்களான 4 பேரும் குளத்தில் இறங்கி குளித்தபோது, நீச்சல் தெரியாததால் ஸ்ரீசுதன், ஜஸ்வந்த் ஆகிய 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்ட அவர்களது நண்பர்கள் அலறி கூச்சலிட்டனர். சத்தம்கேட்டதும், மீன் பிடித்துக்கொண்டிருந்த 2 பேர், குளத்தில் குதித்து நீரில் மூழ்கி 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர், 2 சிறுவர்களையும் பரிசோதித்தபோது, அவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நண்பர்களுடன் குளிக்க சென்றபோது 2 பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Dredakkam ,Dharapakkam ,Sreesutan ,Raja ,Anna Street, Thalampur ,Chennai ,
× RELATED ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில்...