×
Saravana Stores

மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்

கிருஷ்ணகிரி, ஆக.30: வரும் சட்டமன்றத் தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அமைச்சர் சக்கரபாணி பேசினார். கிருஷ்ணகிரியில், கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ‘கடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும், இந்த முறை திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளீர்கள். இதற்காக இரவு பகலாக பாடுபட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில்இ 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

அதற்காக கட்சியினர் பணியாற்ற வேண்டும் என்று நமது முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். இந்த மாவட்டத்தை பொறுத்தவரை, 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். 2026 தேர்தலிலும் மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தொடர தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்,’ என்றார்.
கிருஷ்ணகிரியில் நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கூட்டத்தில் திமுக பவள விழாவையொட்டி, சென்னையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பெருந்திரளாக பங்கேற்பது, கலைஞரின் உருவத்துடன் கூடிய 100 ரூபாய் நாயணம் வெளியிட்ட ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, கலைஞருக்கு ஒன்றிய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட வேண்டும், 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஆணைப்படி, கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும், திமுக சார்பாக போட்டியிடுபவர்களை வெற்றி பெற செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பரிதாநவாப், செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம், பாலன், நாகராசன், கோதண்டன், சித்ரா சந்திரசேகர், நகர செயலாளர் நவாப், சாந்தமூர்த்தி, மகேந்திரன், நரசிம்மன், சுப்பிரமணி, ராஜேந்திரன், அறிஞர், செல்வம், குமரேசன், ரஜினிசெல்வம், தனசேகரன், குண.வந்தரசு, தம்பிதுரை, பாபு, வெங்கட்டப்பன், பார்த்திபன், முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், டேம்.வெங்கடேசன், டாக்டர் மாலதி நாராயணசாமி, முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி, அன்பரசன், சீனிவாசன், கிருஷ்ணன், தினேஷ்ராஜன், ஜெயேந்திரன், லட்சுமிபிரியா, விஜய் ராஜசேகர், புஷ்பா, பாலாஜி, சங்கர், வேலுமணி, நாராயணமூர்த்தி, குப்புராஜ், வெங்கடேசன், உஷாராணி குமரேசன், விஜயலட்சுமி பெருமாள், சந்தோஷ்குமார், அமானுல்லா, அம்சவேணி செந்தில்குமார், ராஜா, சுனில்குமார், ஆலப்பட்டி வாசுதேவன், ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,Krishnagiri ,Minister ,Chakrapani ,Krishnagiri district ,East District ,DMK ,District Council ,President ,Dinakaran ,
× RELATED அதிமுகவுடன் யாரும் கூட்டணி சேர தயாராக...