- சர்வதேச
- முட்டமில் முருகன் மாநாடு
- அமைச்சர்
- சேகர்பாபு
- பழனி
- இந்து மதம்
- சேகர்பபு
- முத்தமிஜ் முருகன் மாநாடு
- பழனி மாநாட்டு கண்காட்ச
- தமிழ்நாடு இந்து சமய தொண்டு
- பழனி இன்டர்நேஷனல்
- சர்வதேச முதமிழ் முருகன் மாநாடு
பழனி: பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2வது நாள் நிகழ்ச்சிகள் தொடக்கம் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். பழனி மாநாட்டு கண்காட்சிகள் 5 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது. 2-ம் நாள் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருவேல் இறைவன் தீத்தமிழ் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து முருகனும் பரதமும், திருப்புகழ் தேனிசை, யாமிருக்க பயமேன் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாலையில் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. அதையடுத்து இரவு விருது வழங்கும் நிகழ்ச்சியுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி இது. எல்லோருக்குமான அரசு இது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு, மாநாட்டை நடத்தும் கடமை உள்ளது. பழனியை சுற்றிலும் அரோகரா கோஷம் கேட்டுக் கொண்டிருக்கிறது. வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. பழனி மாநாட்டு கண்காட்சிகள் 5 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. 39 மாதங்களில் ஆன்மிக அன்பர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம். இந்துசமய அறநிலையத்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார் முதலமைச்சர். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
The post அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது: அமைச்சர் சேகர்பாபு! appeared first on Dinakaran.