×

பொறியியல் கவுன்சலிங் நடைமுறைகள்

பொறியியல் கவுன்சலிங் நடக்கும் தினத்தில், மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே மையங்களுக்கு வர வேண்டும். ஒவ்வொரு பிரிவு கவுன்சலிங்கின் முடிவில் காலியிட விவரங்கள், அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிடப்படும். கவுன்சலிங்கிற்கு வரும் மாணவர்கள் இப்பணத்தை வங்கி கவுன்டரில் பணம் செலுத்தி, கவுன்சலிங் படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் கவுன்சலிங்கிற்கு வரவேண்டிய மாணவர்கள் ஒலிபெருக்கி மூலம் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்படுவர்.

மாணவருடன், பெற்றோர் அல்லது உறவினர் ஒருவர் அனுமதிக்கப்படுவர். முதலில் கவுன்சலிங் விளக்க அறைக்கு செல்ல வேண்டும். அங்கு மாணவர்களுக்கு கவுன்சலிங் நடைமுறைகள் இரு பெரிய திரைகளில் விளக்கப்படும். மேலும் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை எந்த வரிசையில் அடுக்கி வைத்து எடுத்து வர வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படும். அதன்படி, மாணவர்கள் சான்றிதழ்களை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கடுத்து, சான்றிதழ் சரிபார்க்கும் அறைக்கு செல்ல வேண்டும். அங்கு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

மாணவர்கள் கொண்டு வரும் சான்றிதழ்கள் உண்மையானவையா அல்லது போலியா என்பதை கண்டறிய நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. கவுன்சலிங் அறையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் முன், வரிசை அடிப்படையில் மாணவரும் அவரும் ஒரு நபரும் அமர வைக்கப்படுவர். ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கு அருகிலும் ஒரு உதவியாளரும் இருப்பார். அந்த உதவியாளர் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்ய உதவுவார். அவரது உதவியுடன் காலியாக உள்ள இடங்களில், மாணவர்கள் தாங்கள் எந்தக் கல்லூரியில், எந்த பாடப்பிரிவில் சேர விரும்புகிறோம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

கவுன்சலிங்கில் இடத்தை தேர்வு செய்யும் மாணவர்கள், தங்களுக்கான இடஒதுக்கீட்டு கடிதத்தை (Allottment Letter) பெற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த பொறியியல் கல்லூரி மற்றும் தேர்வு செய்த பாடப்பிரிவு தான் இடஒதுக்கீட்டுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை ‘044 – 22358265, 66, 67, 68’ ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த தகவல் மையம் தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

* பாடப்பிரிவுகளின் வகைகள் என்னென்ன
பொறியியல் படிப்புகள் சர்க்கியூட் பாடப்பிரிவு, நான்-சர்க்கியூட் பாடப்பிரிவு என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சார்ந்த பாடப்பிரிவுகளை சர்க்கியூட் பாடப்பிரிவுகளாகவும் மெக்கானிக்கல், சிவில் போன்றவற்றை நான்-சர்க்கியூட் பாடப்பிரிவுகளாகவும் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

The post பொறியியல் கவுன்சலிங் நடைமுறைகள் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர்...